Home Srilanka திலீபன் தண்ணீர் கேட்டாராம்; பிரபாகரன் கொடுக்கவில்லையாம்: கோட்டா அரசை குஷிப்படுத்த எதற்கும் தயாரான டக்ளஸ்!

திலீபன் தண்ணீர் கேட்டாராம்; பிரபாகரன் கொடுக்கவில்லையாம்: கோட்டா அரசை குஷிப்படுத்த எதற்கும் தயாரான டக்ளஸ்!

திலீபன் நினைவேந்தல் என்ற போர்வையில் மக்களை பகடைக்காய்களாக்கி தமிழ் தலைவர்கள் தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்வதற்காக மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பகடைக்காய்களாக வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கு முனைகின்றனர். அதன் ஒரு அம்சமே திலீபனின் நினைவேந்தல் விவகாரம் என்றும் தெரிவித்தார்.

நேற்று முன்தினமும் திலீபன் தொடர்பான அவதூறான கருத்துக்களை சொல்லி, சிங்கள ஆட்சியாளர்களை குஷிப்படுத்த முயன்ற டக்ளஸ், நேற்றும் அந்த பணியை செவ்வனவே செய்தார்.

மக்கள் நம்பிக்கையை வென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், போன்ற தலைவர்கள் மட்டுமன்றி புளொட், ரெலோ, ஈபிடிபி என அவற்றின் தலைவர்களைக் கொன்றவர்கள் விடுதலைப்புலிகளே. திலீபனும் அவ்வாறு ஒருவரே.

திலீபனுக்கும் அதற்கான தகுதி கிடையாது.

எனினும் ஒருவகையில் தண்ணீர் கேட்ட திலீபனுக்கு தாகம் தீர்க்காமல் அவரைக் கொன்றதும் பிரபாகரனே என்பதை மறந்துவிட்டு மக்கள் மீதான அக்கறையாக காட்டி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்ளப் பார்க்கின்றார்கள் தமிழ் அரசியல் தலைவர்கள்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவர்களோடு இணைந்தவர்களும் ஒரே நோக்கத்துடனே செயற்படுகின்றனர்.

அவர்கள் ஒருபோதும் மக்கள் நலன், மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளவில்லை. கடந்த காலங்களிலும் அவ்வாறுதான் செயற்பட்டனர்.

அவர்களது தேவை அவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொள்வதே.

அதற்காக அவர்கள் இப்போதும் மீண்டும் தமிழ் மக்களை உசுப்பேற்றி அவர்களை பலிக்கடாக்களாக்கப் பார்க்கின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் நான் எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு யுத்தத்தில் இறந்தவர்களின் தினத்தை நினைவு கூருவது மற்றும் அவர்களுக்கான சமய சடங்குகளை நிறைவேற்றுவது தொடர்பில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தேன்.

அதன்போது இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்கள் எவரும் பங்கேற்காமல் ஓடி ஒளிந்து கொண்டனர்.

என்னுடைய பிரேரணையை வழிமொழிந்ததும் கூட வேறு ஒரு கட்சி எம்பி தான்.அதில் தனியே நான் எதையும் செய்ய முடியாமற் போனது என்பதை குறிப்பிட வேண்டும். அவ்வாறானவர்களே இப்போது இவ்வாறு செயல்படுகின்றனர்.

தமது சுயலாப அரசியலுக்காக மீண்டும் போராட்டம் என எதையாவது தொடங்கி மக்களை உசுப்பேத்தி மக்களைப் பலி கொடுக்கப் பார்க்கின்றனர்.

இதனை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

அதிகம் படித்தது

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...
- Advertisement -

Related News

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...

பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது!

பேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி!

கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...

மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு!

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...

மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா!

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here