Home Srilanka யாழ் தேசிய கல்வியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் கௌரவிப்பு நிகழ்வு.

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் கௌரவிப்பு நிகழ்வு.

(யாழ் லக்சன்)

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மனி சண்முகதாஸ் அவர்களுக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வானது நேற்றையதினம்(21.09.2020)மாலை 04.30 மணியளவில் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களது தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பேராசிரியர் மனோன்மனி சண்முகதாஸ் அவர்கள் ஹைக்கூ கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பிலும் வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தமிழ் பாரம்பரியத்த்தின் சிறப்பும் தமிழ் மன்றமும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியதுடன் தொடர்ந்து கல்லூரியின் ஆசிரிய மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் பீடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

5 1 2 39 101 2

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -