Home International பிரித்தானியாவில் துணிச்சலுக்காக விருது பெற்ற தமிழ் சிறுமி... அசத்தலாக செயற்பட்டு தந்தையை காப்பாற்றினார்!

பிரித்தானியாவில் துணிச்சலுக்காக விருது பெற்ற தமிழ் சிறுமி… அசத்தலாக செயற்பட்டு தந்தையை காப்பாற்றினார்!

பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் சிறுமியொருவர், துணிச்சலாக செயற்பட்டமைக்கான தங்க விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

உயிராபத்தான நிலைமையில் மயக்கமடைந்த தனது தந்தையை, பதற்றமின்றி காப்பாற்றியமைக்காக 5 வயதான அந்த சிறுமி கௌரவிக்கப்பட்டார்.

சாம் சூரியகுமார் (34)- சிந்து தம்பதிகளின் புதல்வியான அவரது, துணிச்சலான செயற்பாட்டை இங்கிலாந்து ஊடகங்கள் விதந்தோதி வருகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்த சம்பவம் தொடர்பான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. லண்டனின் சுட்டனின் வொர்செஸ்டர் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் சாம் சூரியகுமார் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

அப்போது வீட்டில் அவரது மகள்களான அவானா சாமுவேல் (5), ஆர்யா (3) ஆகியோர் இருந்தனர். மனைவி வெளியில் சென்றிருந்தார்.

தந்தை மயக்கமடைந்ததும், தனது சகோதரி ஆர்யாவை இன்னொரு அழைத்து சென்றுள்ளார். பின்னர் உடனடியாக தாய் மற்றும் வேறு சில உறவினர்களிற்கு அழைப்பேற்படுத்தி தகவலை பகிர்ந்துள்ளார்.

பின்னர் அவசர இலக்கமான 999ஐ அழைத்து, தகவலை தெரிவித்துள்ளார். அவசர இலக்கத்திலிருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி, தந்தையை பாதுகாப்பான நிலையில் படுக்க வைத்துள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் குழு அங்கு விரைந்த போது, அவர்கள் ஆச்சரியப்பட்டனர். 5 வயது சிறுமி நிலைமையை பதற்றமின்றி கையாண்டுள்ளதுடன், தம்மால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் படி தந்தையை பாதுகாப்பான நிலைமைக்கு மாற்றியிருந்துள்ளார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சாம் சூரியகுமார் சிகிச்சையளிக்கப்பட்டு பரிசோதித்ததில், மூளையில் கட்டி உருவாகியிருந்தது தெரிய வந்தது.

அவானா பதற்றமடையாமல் செயற்பட்டதாலேயே தந்தையை காப்பாற்ற முடிந்தது, அவர் 5 நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் தந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயிருக்கும் என வைத்திய வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்தன.

அவர் கல்வி கற்கும் பாடசாலையில் துணிச்சலான மாணவியென்ற விருதளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அது ஆபத்தானது என்பதால் அவர் சத்திரசிகிச்சைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அதற்காக தற்போது நிதி திரட்டி வருகிறார்.

120029977 2678096315778809 4882757509263501862 n

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here