Home Sports LPL அணிகளை வாங்க அம்பானி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இலங்கைக்கு

LPL அணிகளை வாங்க அம்பானி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இலங்கைக்கு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடாத்தப்படும் ‘லங்கா பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வதேச வீரர்கள் 420 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அதில 150 பேர் ஏலத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏலத்தில் வாங்குவதற்கு பல பிரபலங்கள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ‘லங்கா பிரீமியர் லீக்’ கிரிக்கெட் அணிகளை விலைக்கு வாங்க முகேஷ் அம்பானி, ஷாருக்கான், ப்ரீத்தி சின்டா ஆகியோர் எதிர்வரும் 01ம் திகதி இலங்கை வரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினை மேற்கோள்காட்டி செய்திக்க வெளியாகியுள்ளன.

‘லங்கா பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடருக்கு இணைய வழி ஊடாக ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வீரர்களுக்கான ஏலத்தில், விளையாடும் 5 அணிகளுக்கும், தலா ஒரு அணிக்கு 6 சர்வதேச வீரர்கள் வீதம் 30 வீரர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இருபதுக்கு-20 ஆட்ட மைதானங்களில் நட்சத்திர வீரர்களாக திகழும் வீரர்கள் பலர் இந்த லீக் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ள நிலையில், க்றிஸ் கெய்ல், டேரன் சமி, டேரன் பிராவோ, ஷஹிட் அப்ரிடி, ஷகீப் அல் ஹஸன், ரவி பொபாரா, ஜொனீ பெயார்ஸ்டோ, கொலின் முன்ரோ, லுக் ரைட் மற்றும் வர்னன் ப்ளெண்டர் இவர்களுள் விசேடமானவர்கள்.

அயல் நாடான இந்தியாவினை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் முனாப் படேல், பிரவீன் குமார், மன்ப்ரிட் கோணி மற்றும் சதாப் ஜகானி ஆகிய வீரர்கள் அடங்குகின்றனர்.

லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 போட்டித் தொடரானது எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி முதல் டிசம்பர் 06ம் திகதி வரை ரங்கிரி தம்புள்ளை, பல்லேகல மற்றும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ போன்ற சர்வதேச மைதானங்களில் இடம்பெறவுள்ளது. போட்டியின் ஆரம்ப உத்தியோகபூர்வ நிகழ்வுகள் ஹம்பாந்தோட்டையில் நடாத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிகம் படித்தது

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...
- Advertisement -

Related News

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...

புருணை இளவரசர் காலமானார் – 7 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

புருணை நாட்டு இளவரசர் அஸிம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். புருணை நாட்டு சுல்தானின் மகனான 38 வயதுடைய இளவரசர் அஸிம் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை...

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில்...

ஆமைகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர்களை வாழைச்சேனை மாவட்ட...

மட்டக்களப்பில் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான அறிவித்தல்!

தற்போது நாட்டில் வியாபகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னாயத்த நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக சகல உள்ளுராட்சி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here