கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.