Home Breaking News மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின்13 ஆவது குரு பூஜை!

கலியுகத்தில் தன்னை அவதார புருஷர் என அடையாளம் செய்து கொள்ளாமல் மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உலக மக்களின் இன்னல்கள் தீர்த்திட ஆன்மீக வழியினை காண்பித்து காயத்திரி வழிபாட்டினை போதித்து பல மகா யாகங்களை செய்து இமயம் முதல் குமரிவரை யாத்திரைகள் மேற் கொண்டு பல மகான்களுக்கும் முக்தியின்பத்தினை நல்கி அருள் வழங்கி மகா சமாதியடைந்த காயத்திரி சித்தர் பஹவான் முருகேசு சுவாமிகளின் 13 ஆவது குரு பூஜையும், 1008 சங்காபிஷேகமும், மகா யாகமும் மிகவும் பக்திப்பூர்வமாக மண்டூர்- பாலமுனை ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ அரசாங்கத்தினதும் சுகாதார பிரிவினரதும் பாதுகாப்பு பணிப்புரைகளை கருத்தில் கொண்டு பகவான் முருகேசு சுவாமிகள் ஆத்ம சீடரான ஆன்மீகக்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் இவ் வழிபாடு நிகழ்த்தப்பட்டது.

உலக மக்களது இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இக்கால சூழலில் அவர்கள் அனைவரது வாழ்வும் மீளவும் இயல்பு நிலைக்கு திரும்பிடவும் நோய்ப்பிணி, பசிப்பிணி நீங்கி அமைதியான ஆனந்தம் நிறைந்த நல் வாழ்வு கிட்டிட வேண்டியும் அங்கிங்கெனாதபடி எங்கும் அனைவருள்ளும் வீற்றிருக்கும் நிலைச் சக்தியான அந்தப் பரம் பொருள் மனித சரீரம் ஏந்தி வந்து போதித்து வழிகாட்டி அவ்வுடல் விடுத்து 13 ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையில் பஹவானின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது ஆத்ம மாணவரினால் தனது குருவின் குரு பூஜை மிகவும் பக்திப் பூர்வமாக ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தின் கிளையான ஸ்ரீ ஆத்ம ஞான பீடத்தில் நிகழ்த்தப்பட்டது.

புனித தீர்த்தங்கள் நிரம்பிய 108 பூரண கலசங்கள் வைக்கப்பட்டும் 1008 சங்குகளில் அபிஷேக திரவியங்களாலான புனித தீர்த்தங்கள் நிரப்பப்பட்டும் 23ம் திகதி புதன்கிழமை மாலை 05:00 மணிக்கு பக்தர்களால் மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 03:00 மணி வரையிலும் காயத்திரி மகா மந்திரம் இடைவிடாது இலட்சக்கணக்கில் ஜெபிக்கப்பட்டு பகவான் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு அபிஷேகிப்பதற்காக வியாழக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் 108 பூரண கலசம் மற்றும் 1008 சங்குகளையும் தம் சிரசில் ஏந்திக் கொண்டு மேளதாள நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க  ஆலயத்தை வலம் வந்து சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு பக்திப் பரவசத்தோடு தங்களது திருக் கரங்களாலேயே அபிஷேகித்து அனைத்து பக்தர்களும் ஆனந்தம் அடைந்தது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

பிரமாண்டமாக அமைந்திருந்த பகவான் முருகேசு சுவாமிகளின் திருவுருவச் சிலை அவரின் நேரடியான எழுந்தருளலை பிரதிபலித்ததை பல பக்தர்களும் தரிசித்து தம்மை மறந்து ஆனந்த கண்ணீர் மல்கிய பேரின்ப அனுபவத்தினையும் காணக்கூடியதாக இருந்தது.

அதனையடுத்து 24ம் திகதி முற்பகல் 10:00 மணிக்கு 108 உயிர் ஜீவ மூலிகைகள் யாகத் திரவியங்கள் சஞ்ஜீவினி மூலிகைகள் என உயிர் காக்கவல்ல அனைத்து விதமான யாகப் பொருட்களும் இடப்பட்டு பகவானின் அருள் வேண்டிய காயத்திரி மகா யாகம் மிக மிக சக்திவாய்ந்த மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில் நிகழ்த்தப்பட்டது.

மகா யாகத்தின் நிறைவில் பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் ஆன்மீக ஞான உபதேசமும் சுவாமிகளினால் நிகழ்த்தப்பட்டு பகவானின் 13 ஆவது குரு பூஜை மிகவும் பக்திப்பூர்வமாகவும் நேர்த்தியாகவும் இனிதே நிகழ்ந்து நிறைவுற்றது.

குருபூஜை நிகழ்வின் புகைப்படங்களை உலகெங்கிலும் வாழும் அனைத்து பக்தர்களின் பார்வைக்காக பதிவேற்றுகிறோம் “நல்லோரைக் காண்பதுவும் நன்று நல்லோர் சொற் கேட்பதுவும் நன்று நல்லோரை பின்பற்றுவதும் நன்று”

DSC 0062 DSC 0083 DSC 0086 DSC 0108 DSC 0124 DSC 0191 DSC 0204 DSC 0215 DSC 0259 DSC 0261 DSC 0293 DSC 0294 DSC 0304 DSC 0329 DSC 0333 DSC 0345 DSC 0346 DSC 0348 DSC 0379 DSC 0381 DSC 0382 DSC 0388 DSC 0395 DSC 0397 DSC 0414 DSC 0417 DSC 0430 DSC 0448 DSC 0460 DSC 0512 DSC 0531 DSC 0538 DSC 0571 DSC 0577 DSC 0635 DSC 0637 DSC 0646 DSC 0650

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -