மட்டக்களப்பு மாவட்ட வின்சன்ட் தேசிய பாடசாலையின் இருநூறாவது ஆண்டின் நிறைவை ஒட்டி தபால் முத்திரை வெளியிடும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் சேவைகள் மற்றும் ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டார்.
இன்று (26) காலை மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையின் முன்றலில் இருந்து பண்ட் வாத்திய மரியாதையுடன் அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு, மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகியது.
பாடசாலையின் இருநூறாவது ஆண்டை முன்னிட்டு தபால் சேவைகள் இராஜாங்க அமைச்சரினால் முத்திரை ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மாணவர்களினால் கண்கவர் நடனம், கவிதை மற்றும் பாடல்கள் அரங்கேற்றப்பட்டன.
இதன்போது இருநூறாவது ஆண்டை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வானது மாணவர்களின் அணிநடை மரியாதையுடன் விருந்தினர்களை அழைத்துவரும் நிகழ்வுடன் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராசாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி.K.பத்மராஜா, மாகாண கல்வி திணைக்கள அதிகாரி திரு.T.A.நிஷாம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு.தி.சரவணபவன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு.V.தவராஜா. மட்டக்களப்பு வலய கல்வித் பணிப்பாளர் S.குலேந்திரகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இத்துடன் இந்நிகழ்வில் வின்சன் தேசிய பாடசாலையின் பழைய அதிபர்கள், பழைய ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், மற்றும் பாடசாலையில் தற்போது கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் இதற்போதைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தன.
நிகழ்வானது மங்கள விளக்கேற்றல். வரவேற்புரை, ஆகியவற்றுடன் தொடக்கி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது. இத்துடன் வின்சன் பாடசாலையின் 200ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விசேட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கெளரவிப்பும், பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பாடசாலையின் வளர்ச்சி தொடர்பிலும் இப்பாடசாலை பெண்களின் வாழ்க்கையில் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இறுதியில் 200 ஆண்டை பிரதிபலிக்கும் கேக் வெட்டப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.