Home Breaking News உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா!!

உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி மாற்று இடத்தில் நடக்கும்- என்.சிறீகாந்தா!!

தமிழ் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் நடத்தப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் திட்டமிட்டபடி நாளை (சனிக்கிழமை) போராட்டம் நடக்கும் என தமிழ் தேசியக் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தடைக் கட்டளையைத் தொடர்ந்து கூடிய தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் நீதிமன்றத் தடையைத் தொடர்ந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த என்.ஸ்ரீகாந்தா, “தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுகூரலுக்கான உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள்கூடி நாளை(இன்று) காலை தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தோம்.

ஆனாலும், இன்று (நேற்று) மதியம் வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் விண்ணப்பம் ஒன்றைச் சமர்பித்து தடைக்கட்டளை ஒன்றைப் பெற்றிருக்கின்றனர். கொரோனா ஆபத்தைச் சுட்டிக்காட்டி பொலிஸார் வழங்கிய விண்ணப்பத்தினை ஏற்று நீதிமன்றம் இந்தக் கட்டளையை வழங்கியிருக்கின்றது.

இந்தத் தடைக் கட்டளையில் பிரதிவாதிகளாக எவருடைய பெயரும் குறிப்பிடப்படாதபோதும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கே தடைக்கட்டளை வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே அதனை உரிய மரியாதையுடன் கவனத்தில் கொள்கிறோம்.

 

இந்தப் பின்னணியில் திட்டமிட்டபடி போராட்டத்தை எங்கு நடத்துவதென்பது தொடர்பாக ஒரு திட்டவட்டமான தீர்மானத்தை நாம் எடுத்துள்ளோம். அதனடிப்படையில் நீதிமன்றக் கட்டளையை மீறாத வகையில் அதற்கான மரியாதைகளுடன் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாகப் பின்பற்றப்பட்டு போராட்டம் நடத்தப்படும்.

இதேவேளை, முன்னர்அறிவித்ததைபோல் 28ஆம் திகதி வடக்கு கிழக்குத் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதிகம் படித்தது

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...
- Advertisement -

Related News

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...

புருணை இளவரசர் காலமானார் – 7 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

புருணை நாட்டு இளவரசர் அஸிம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். புருணை நாட்டு சுல்தானின் மகனான 38 வயதுடைய இளவரசர் அஸிம் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை...

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில்...

ஆமைகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர்களை வாழைச்சேனை மாவட்ட...

மட்டக்களப்பில் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான அறிவித்தல்!

தற்போது நாட்டில் வியாபகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னாயத்த நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக சகல உள்ளுராட்சி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here