Home Srilanka 20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

20வது திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அரசாங்கம் முன்வைத்துள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மிகவும் பயங்கரமானது எனவும் இதன் மூலம் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் நினைவுத் தினத்தை முன்னிட்டு ஹொரகொல்ல பண்டாரநாயக்க கல்லறைக்கு அருகில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சந்திரிகா இதனை கூறியுள்ளார்.

பண்டாரநாயக்கவின் கொள்கைகள் எங்கு இருக்கின்றன என்பதை நான் தற்போது தேடுகிறேன். எனது இதயத்தில் அது இருக்கின்றது. எமக்கு நெருக்கமான கட்சியினரிடம் அது இருக்கின்றது. ஏனைய இடங்களில் இதனை நான் காணவில்லை எனவும் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு என்ன நடக்கும்?.

பதில் – எனக்கு தெரியாது. என்னை அதில் இருந்து வெளியேற்றி உள்ளனர். கட்சியில் இருப்பவர்களிடம் இது பற்றி கேட்க வேண்டும்.

கேள்வி – உங்களை அப்படி வெளியேற்ற முடியாது அல்லவா?. இது உங்களுடைய கட்சி தானே?.

பதில் – எங்களுடையது எனக் கூறி மற்றவர்களை போல் கட்சியை எனது சொத்தாக எழுதிக்கொள்ள மாட்டேன். நான், எனது தம்பி, மகள் மற்றும் எனது கணவர் என்ற வகையில் நாங்கள் அரசியலில் ஈடுபட மாட்டோம்.

இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்களுடையது என்று நாங்கள் ஒருபோதும் நினைத்தில்லை.

நான் கட்சியை பொதுமக்களின் தலைவர் ஒருவரிடம் வழங்கினேன். ஆனால் வேலையை சரியாக செய்யவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியாது. கட்சி ஒப்படைக்கப்பட்ட தலைவர் கட்சியை முற்றாக சிதறடித்து, கிழித்து தரையில் போட்டு மிதித்து விட்டார்.

கேள்வி – கட்சியை கட்டியெழுப்ப நீங்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்க போவதில்லையா?.

பதில் – தற்போது யாருடன் இணைந்து கட்சியை கட்டியெழுப்புவது?. பண்டாரநாயக்கவின் கொள்கைக்கு அமைய மக்கள் சேவை செய்யும் நபர்களுக்கு கொள்ளையிட முடியாது. கொலை செய்ய முடியாது, அரச பணம், மக்களின் பணத்தை கொள்ளையிட முடியாது.

இப்படி செய்யாதவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டத்தில் இருக்கின்றனரா என்று நான் தேடுகிறேன். இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

கேள்வி – 20வது திருத்தச் சட்டத்துடன் அதிகாரம் மீண்டும் ஒரு இடத்திற்கு செல்ல உள்ளது?.

பதில் – 20வது மிகவும் பயங்கரமானது. ஜனநாயகம் முடிந்து விடும் என சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அதிகம் படித்தது

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...
- Advertisement -

Related News

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர்! நாசா அறிவிப்பு

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. செய்மதி தொழிநுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்திரனில் இயற்கையான தண்ணீர் இருப்பதை உறுதியாக கூற முடியும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சோபியா...

நிலவில் நீராதாரம் – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என...

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி...

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்- இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது; தொற்றுநோய் தடுப்பு பிரிவு!

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here