Home Breaking News பொய்யான செய்தி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை - ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

பொய்யான செய்தி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

நாட்டின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு இயற்கை சுற்றுச் சூழல் அழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறி பொய்யான செய்திகள் சமூகமயப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனங்கள் தீயிடப்படுவதாகவும் இயற்கை காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதாகவும் கூறி பொய்யான செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இதற்கு முன்னர் இப்படியான இயற்கை அழிவு ஏற்படவில்லை எனவும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அமைதியாக இருக்கின்றது என காட்டும் முயற்சியை இந்த செய்திகளை உருவாக்கும் நபர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த செய்திகள் பொய்யானவை மற்றும் உருவாக்கப்பட்டவை என்பது அவற்றை கண்காணித்ததன் மூலம் தெரியவந்துள்ளது.

சுற்றாடல் அழிக்கப்படுவதாக கூறப்படும் பொய்யான செய்திகள் சமூக ஊடகங்களிலும் சில அச்சூடகங்களிலும் தொலைக்காட்சி மற்றும் வானொலிகள் மூலம் பிரசாரப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு வெளியிடப்படும் செய்தி போலியானது என்ற விடயம் உறுதியானதும் அவை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கப்படுகின்றன. இதன் பின்னர் வேறு பொய்யான செய்தி உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் அவற்றுக்கு ஆதரவானவர்கள் இந்த பொய்யான செய்திகளுக்கு பெரியளவில் பிரபலத்தை பெற்று கொடுத்து வருவதாகவும் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக இவ்வாறு பொய்யான செய்திகளை உருவாக்கி, சமூகமயப்படுத்தும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here