Home Breaking News கொரோனா வைரஸ் நோயினால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணமடையக்கூடும் என்று ஐ.நா சுகாதார நிறுவனம்...

கொரோனா வைரஸ் நோயினால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணமடையக்கூடும் என்று ஐ.நா சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது !

கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று செவ்வாய்க்கிழமை வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய ரீதியில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி பொதுமக்கள் பாவனைக்கு வரும் போது கொரோனா வைரஸ் நோயினால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணமடையக்கூடும் என்று ஐ.நா சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலக மக்கள் பலரை இழந்துவிட்டார்கள் அவர்களுடைய இறுதிச் சடங்கில் கூட பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை , இறந்த பலர் தனிமையில் இறந்துள்ளனர் இது மிகவும் கடினமான மற்றும் தனிமையான மரணம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட ஏழு வகையான தொற்று நோய்த் தாக்க எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கையில் இது “மிகவும் சோகமான மைல்கல்” என்றும் அவர் விவரித்தார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீன நகரமான வுஹானில் இந்த வைரஸ் முதன்முதலில் தோன்றியதிலிருந்து 33 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த ஆகஸ்டில் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை வெளியிட்ட முதல் நாடு ரஷ்யா. ‘ஸ்பூட்னிக் வி’ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி இதுவரை 5,000 ற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வரை இது எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள பல நாடுகள் தினசரி கோவிட் -19 தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்ற நிலையில் தொற்றுக்களின் எண்ணிக்கை விட இறப்புகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகின்றது.

இருப்பினும் புதிய நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு இங்கிலாந்து போன்ற நாடுகளை வைரஸைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்தத் தூண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

அதிகம் படித்தது

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...
- Advertisement -

Related News

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...

பீ.சி.ஆர் பரிசோதனைக்கு தடையேற்படுத்திய மீனவருக்கு விளக்கமறியல்!

காலியில் மீனவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தும் போது மருத்துவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு தடைகளை ஏற்படுத்திய மீனவர் ஒருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் ஹர்சன கெக்குனுவல இன்று...

பதுளை எம்.பி அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை!

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 20 வது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது...

டிக்கோயா- வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்!

கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியரும் அவரது குடும்பத்தவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். ஹட்டன் நகரில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை செய்யும் ஒருவரை முதலில் பரிசோதித்து, அவரை...

தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5 மில்லியன்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here