Home Srilanka மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.

கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

வயல் நிலங்களை திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள் இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும். இதன் காரணமாக வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குரித்தான குளங்களிலிருந்தும் கனிசமான மணல் அகழ்வதனால் இவற்றின் ஆழம் அளவுக்கதிகமாக அதிகரிப்பதுடன், இங்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

இத் திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியாவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின் அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

IMG 20200817 WA0153 1024x474 1 720x450 1

- Advertisement -

அதிகம் படித்தது

மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
- Advertisement -

Related News

மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

நெடுந்தூர அரச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக...

முச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்!

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை- டயகம பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை நாகசேனை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த...

கிளிநொச்சி பொலிஸாரால் 3 வாள்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் , பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லையடிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்கள் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ – 9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அடுக்கப்பட்டிருந்த மின் கம்பங்களுக்கு...

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அருகே சுறா ஒன்று தொடையில் கடித்ததில் படுகாயமடைந்த நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டவுன்ஸ்வில்லுக்கு அருகே பவளப்பாறைகள் நிறைந்த கடல் பகுதியில் சுறா தாக்குதலுக்கு உள்ளான நபர், படகு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here