Home Technology 17 அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களை நீக்கியது கூகுள்: காரணம் இதுதான்

17 அன்ரோயிட் அப்பிளிக்கேஷன்களை நீக்கியது கூகுள்: காரணம் இதுதான்

பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதும், தனது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதுமான அப்பிளிக்கேஷன்களை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கி வருகின்றமை தெரிந்ததே.

இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 17 அப்பிளிக்கேஷன்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷன்கள் Joker எனும் மல்வேரினைக் கொண்டிருப்பதாக தெரிவித்தே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

இந்த மல்வேர்கள் பயனர்களின் கைப்பேசியிலிருந்து தொலைபேசி இலக்கங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் கைப்பேசி தொடர்பான விபரங்களை திருடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு நீக்கப்பட்ட அப்பிளிக்கேஷன்களின் பட்டியல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

All Good PDF Scanner
Mint Leaf Message-Your Private Message
Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
Tangram App Lock
Direct Messenger
Private SMS
One Sentence Translator – Multifunctional Translator
Style Photo Collage
Meticulous Scanner
Desire Translate
Talent Photo Editor – Blur focus
Care Message
Part Message
Paper Doc Scanner
Blue Scanner
Hummingbird PDF Converter – Photo to PDF
All Good PDF Scanner

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -