தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள்.
ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி, சுனைனா மற்றும் பலர் இணைந்து நடித்து வெளியான ஆந்தாலஜி படம் தான் சில்லு கருப்பட்டி.
இந்நிலையில் அதே போல் தற்போது ஒரே படத்திற்காக 5 இயக்குனர்கள் தங்களது 5 வித்தியாசமான கதைக்களுடன் ஆந்தாலஜி சீரிஸுக்காக இணைந்துள்ளனர்.
ஆம் கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சுதா கொங்கரா, சுஹாசினி மணிரத்னம், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் ” புத்தம் புது காலை ” எனும் ஆந்தாலஜி சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார்கள்.
இந்த சீரிஸ் வரும் அக்டோம்பர் 16ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளிவரவிருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
5 of your favorite storytellers bring you 5 heartwarming stories!#PuthamPudhuKaalai, October 16.@menongautham @Sudhakongara_of @DirRajivMenon @hasinimani @karthiksubbaraj pic.twitter.com/mb4vfQJKpr
— amazon prime video IN (@PrimeVideoIN) September 30, 2020