நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்படவுள்ளனர்.
இதனையடுத்து, 46 ஆயிரத்து 673 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 74 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 7,132 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.