Home India ராகுல் காந்தி மீது தடியடி? நெஞ்சைப் பிடித்த தள்ளிய காவல்துறை - உ.பியில் பெரும் பரபரப்பு

ராகுல் காந்தி மீது தடியடி? நெஞ்சைப் பிடித்த தள்ளிய காவல்துறை – உ.பியில் பெரும் பரபரப்பு

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சண்ட்பா பகுதியில் வயலில் தாயுடன் வேலை செய்து கொண்டிருந்த 19 வயது இளம்பெண்ணை 4 இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கடுமையாக தூக்கி வீசினர். மருத்துவமனையில் 15 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு இளம்பெண் உயிரிழந்த நிலையில், இறுதி மரியாதைக்கு அவகாசம் அளிக்காமல், சடலத்தை போலீஸார் எடுத்துச் சென்று நள்ளிரவில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்றார்.

கீழே விழுந்த ராகுல் காந்திrahul gandhi 2

அவர், யமுனா விரைவுச் சாலையில் நடந்து சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறை எதிர்ப்பையும் மீறி சென்றபோது காவல்துறை அதிகாரி ராகுல் காந்தியின் நெஞ்சின் மீது கைவைத்து தள்ளிவிட்டார்.

Rahul Gandhi Hathras  174e3d5d108 medium

மேலும், அங்கு கூடியிருந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘காவல்துறையினர் என்னை தள்ளிவிட்டனர். என்னை லத்தியால் தாக்கினர். என்னை மைதானத்துக்கு தூக்கிச் சென்றனர். இந்த நாட்டில் மோடி மட்டும்தான் நடந்துசெல்லவேண்டுமா? சாதரண மனிதன் நடந்துசெல்லக்கூடாதா? எங்களுடைய வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனால், நாங்கள் நடந்து செல்ல தொடங்கினோம்’ என்று தெரிவித்தார்.

பின்னர், விதிகளை மீறியதாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் பல இந்தியச் செய்திகளை பெற

- Advertisement -

அதிகம் படித்தது

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...
- Advertisement -

Related News

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார். இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று...

பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

மன்னார் பாஸார் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது என...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020...

வெள்ளைப்படுதல் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா? என்ன காரணம்..? என்ன செய்யலாம்..?

பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here