அரங்கம் தவராஜா என பொதுவாகப் பலராலும் அழைக்கப்படும் தவராஜா மட்டக்களப்பின் ஓர் அடையாளமும் ஆவார்.
சிறந்த பேச்சாளர், நாடக நடிகர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், சமூக சேவகர் என பன்முகம் கொண்டவர்
இந்தப் பன்முகத்தன்மை அவரது ஆளுமைகளுள் ஒன்று
1973 தொடக்கம் 1982 வரை மட்ட்க்களப்பில் நடந்தேறிய பௌர்ணமி நிகழ்ச்சிகளில் அவரது நாடகத் திறன்கள் வெளிப்பட்டன.
தனது முதிரா இளம் வயதில் தமிழரசுக்கட்சி அன்று நடத்திய சத்தியாக்கி ரகங்களிலும், சட்டமறுப்பு போராட்டங்களிலும் ஈடுபட்ட இவர் 1976 களில் இளைஞர் பேரவையுடனும் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டு முள்ளார்.
இன்றுவரை அவருக்கென ஓர் அரசியல் பார்வை, அரசியல் நோக்கு, அரசியல் செயற்பாடு உண்டு
1990 களில் கவிஞராக முகிழ்த்த தவராஜா தொலைந்து போன சுதந்திரம் நாளைய நாம் என இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
பல கவி அரங்குகளில் கலந்துகொண்டுமுள்ளார்
அவர் பேச்சும் கவிதை கூறும் விதமும் சுவராஸ்யமாயிருக்கும் சொற்களில் விளையாடுவார்
அவரால் ஆரம்பிக்கப்பட்டு இரு மாதத்திற்கு ஒரு முறைவெளியாகிய அரங்கம் எனும் பத்திரிகை மூலம் அரங்கம் தவராஜா என பின்னர் அனைவராலும் அழைக்கப்பட்டார்
அரசியல் அரங்கம் நாடக அரங்கம், விளையாட்டு அரங்கம், அன்னையர் அரங்கம்,கவிஞர் அரங்கம் என ஓவ்வொரு முறையும் அது ஒவ்வொரு அரங்கமாக வெளிவந்தது
இவர் இப்போது அவ்வப்போது தினகரன், வீரகேசரி அரங்கம் தமிழ் அலை முதலான பத்திரிகைகளில் தான் எழுதிய கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து ஓர் கட்டுரைத்தொகுதியாக வெளியிடுகிறார்.
அத்தகைய நூலிற்கு அவர் இட்டிருக்கும் பெயரே இதற்குச் சான்றாகும் அதுதான் மட்டு நகரின் இன்னொரு பக்கம் என்பதாகும்
இதுவரை மட்டக்களப்பின் ஒரு பக்கமே காட்டப்பட்து இது இன்னொரு பக்கம் என்று கூறுவதனைப் போல இந்நூல் அமைந்துள்ளது.
எனவே நாளை 03/010/2020 மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் முற்பகல் 8:30 மணிக்கு இவ் வெளியீட்டு விழா சிறப்பாக இடம்பெற இருப்பதனை அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
செய்தி தொகுப்பு – பேராசிரியர் திரு மௌனகுரு அவர்களின் முகநூலில் இருந்து….