Home International ஊடகங்களுக்கு வருமானத்தில் பங்கு கூகுள் அதிரடி

ஊடகங்களுக்கு வருமானத்தில் பங்கு கூகுள் அதிரடி

ஊடகங்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் வெளியிடும் செய்திகளை கூகுள், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு பெரும் வருமானம் ஈட்டி வருகின்றன. ஆனால், பெரும் வருமானத்தை ஈட்டிவிட்டு ஊடகங்களுடன் வருமானத்தை பகிர்ந்து கொள்வதில்லை என டிஜிட்டல் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்காக அவுஸ்திரேலியா அண்மையில் ஒரு பிரேரனையை தாக்கல் செய்தது. அதில், டிஜிட்டல் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இதை பேஸ்புக் நிறுவனம் கடுமையாக எதிர்த்தது. வருமானத்தை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் செய்திகளையே பயன்படுத்தப் போவதில்லை என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்தது.

எனினும், சிறு சிறு மாற்றங்களுடன் புதிய சட்டத்தை ஏற்றுக் கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது.

இதற்கேற்ப அவுஸ்திரேலியா அரசாங்கமும் மாற்றங்களை கொண்டுவர ஒப்புக் கொண்டுள்ளது. ஊடகங்கள் செய்திகளை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிட ஏராளமான பணத்தை செலவிடுகின்றன. எனவே, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பங்கு வேண்டுமென்பதே ஊடக நிறுவனங்களின் கோரிக்கை.

இந்நிலையில், அடுத்த 3 வருடங்களில் உலகம் முழுவதும் இருக்கும் செய்தி நிறுவனங்களுக்கு வருமானத்தில் பங்கு செலுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் 1ம் கட்டமாக, ஜேர்மனியில் கூகுள் நியூஸ் ஷோகேஸ் ( google news showcase ) என்ற புதிய தளத்தை கூகுள் அறிமுகப்படுத்தும் என்று கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்பாபேட்டின் CEO சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தத் தளம் இந்தியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதை பயன்படுத்த ஏராளமான செய்தி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதன் மூலம் ஊடகங்களுக்கு வருவாயில் பங்கு கிடைக்கும். அடுத்த 3 வருடங்களில் மட்டும் $1 Billion ( சுமார் 18,400 கோடி ரூபா ) ஊடகங்களுக்கு கூகுள் நிறுவனத்தின் வருமானத்தின் பங்காக வழங்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here