Home Srilanka தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக ப.சத்தியலிங்கம்.

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக ப.சத்தியலிங்கம்.

download 1தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக ப.சத்தியலிங்கம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து பொதுச்செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத்தலைவர்களாக செயற்பட்டு வந்த வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும் வரையிலும் துணைத்தலைவராக செயற்பட்டு வந்த ப. சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக செயற்படும் வகையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வைத்தியகலாநிதியுமான ப. சத்தியலிங்கத்திடம் கேட்டபோது அவரும் அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அதிகம் படித்தது

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...
- Advertisement -

Related News

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...

பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது!

பேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி!

கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...

மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு!

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...

மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா!

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here