Home Srilanka எந்தவொரு இன, மத வேறுபாடும் இன்றி ரிஷாட் MPயுடன் வேலை செய்தோம் - பாதுகாப்பு செயலாளர்

எந்தவொரு இன, மத வேறுபாடும் இன்றி ரிஷாட் MPயுடன் வேலை செய்தோம் – பாதுகாப்பு செயலாளர்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட நாங்கள் அனைவரும் எந்தவொரு இன, மத வேறுபாடும் இன்றி ஒன்றாக வேலை செய்தோம்.” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து பணியாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் முன்னாள் அமைச்சரும் அவரது குழுவினரும் எந்தவொரு இன, மத வேறுபாடும் இன்றி அவரால் முடிந்த அனைத்தையும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி செய்ய உறுதிபூண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“வன்னி மாவட்டம் அல்லது வவுனியா எனக்கு அறிமுகமில்லாத இடம் அல்ல. அக்காலப்பகுதியில் இடம்பெயர்ந்தோருக்கான பொறுப்பதிகாரியாக நான் நியமிக்கப்பட்டேன்.

அந்த நேரத்தில், மீள்குடியேற்ற அமைச்சர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆவார். இந்த மாவட்டத்தில் நாங்கள் ஒன்றிணைத்து செயற்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம், எந்தவொரு இன, மத வேறுபாடுகளும் இல்லாமல் அனைவருக்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.” என்றார்.

- Advertisement -

அதிகம் படித்தது

டிக்கோயா- வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்!

கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியரும் அவரது குடும்பத்தவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். ஹட்டன் நகரில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை செய்யும் ஒருவரை முதலில் பரிசோதித்து, அவரை...
- Advertisement -

Related News

டிக்கோயா- வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்!

கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியரும் அவரது குடும்பத்தவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். ஹட்டன் நகரில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை செய்யும் ஒருவரை முதலில் பரிசோதித்து, அவரை...

தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5 மில்லியன்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி...

மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

நெடுந்தூர அரச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக...

முச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்!

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை- டயகம பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை நாகசேனை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here