Home Srilanka காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில்

காணாமல் போனவர்கள் வெளிநாடுகளில்

காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர். வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன. எனவே உண்மையான தரவுகளுடன் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தந்திருந்த அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகால யுத்தம் என்பது சுலபமானது அல்ல. யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்கள் மரணித்தவர்கள் பற்றி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளது.

குறிப்பாக காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர். அது மட்டும் அல்லாது வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர். எனவே இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன.

எனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மையாக அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.காணாமல் போனவர்களின் விவகாரங்களை கையாள்வதற்கு காணாமல் போனவர்கள் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஊடாக நாம் தகவல்களை திரட்டி வருகிறோம்.

குறிப்பாக உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான அறிக்கைகள் ஒவ்வொரு தொகையை கூறுகின்றன. எனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் வேறுபாடுகள் இருப்பதால் ஆதாரபூர்வமான அறிக்கை ஒன்று மிகவும் அவசியமான ஒன்றாகும்.

எனவே காணாமல் போனவர்கள் விவகாரத்தில் முதலில் தரவுகள் அடிப்படையில் உண்மையான அறிக்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வழங்குவது தொடர்பில் கடந்த அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தால் அது ஆராயப்படும் என்றார்.

1601663025 keheliya 2

- Advertisement -

அதிகம் படித்தது

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
- Advertisement -

Related News

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

விசேட பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ரிஷாட்

விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ரிஷாட் பதியூதின் அழைத்து வரப்பட்டிருந்தார். விசேட பாதுகாப்பு உடை அணிந்து ரிஷாட் பதியூதின்...

யார் இந்த மாகந்துர மதுஷ்? (கட்டுரை)

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமரசிங்க ஆரச்சிகே மதுஷ்...

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு !

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு ! தம்மை கைது செய்யக் கூடாதென உத்தரவிடக் கோரி ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம்!!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் நாளை (22) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here