Home Breaking News அம்பாறையில் 2 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு

அம்பாறையில் 2 கொரோனா நோயாளிகள் கண்டுபிடிப்பு

அம்பாறையில் இரண்டு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனன் தெரிவித்துள்ளார்.

கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் விடுறையில் அம்பாறைக்கு சென்றிருந்த இருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் முகக்கவசம் சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் மக்கள் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா தொழிற்சாலையில் பணியாற்றிய 500இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -