Home Breaking News சில கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறவும் உள்ளே செல்லவும் தடைவிதிப்பு

சில கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறவும் உள்ளே செல்லவும் தடைவிதிப்பு

மீரிகமை, ஹாப்பிட்டிகம தேசிய கல்வியல் கல்லூரியில் பயிலும் 6 ஆசிரிய மாணவர்கள், திவுலப்பிட்டிய ஸ்ரீ ஞானவாச பாடசாலையில் கற்பித்தல் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டதன் காரணமாக, அவர்கள் உட்பட கல்வியல் கல்லூரியில் பயிலும் 190 மாணவர்கள், கல்லூரியில் இருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கல்வியல் கல்லூரியில் சில விரிவுரையாளர்கள் இருப்பதுடன் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியல் கல்லூரியில் உள்ள அனைவரும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

திவுலப்பிட்டிய ஸ்ரீ ஞானவாச பாடசாலையில், திவுலப்பிட்டிய கொரோனா தொற்றாளரான பெண்ணின் புதல்வி கல்வி கற்று வந்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கல்வியல் கல்லூரிக்கு தினமும் வந்து செல்லும் கல்வி மற்றும் கல்விசார ஊழியர்கள் கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கையெழுத்திட்ட பின்னர் திரும்பி செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது காணப்படும் நிலைமையில், வெயாங்கொடை சாரிபுத்த தேசிய கல்வியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் அங்கிருந்து வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் வெளியார் உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பரவும் நோய் ஒன்று காரணமாக வெயாங்கொடை சியனே தேசிய கல்வியல் கல்லூரி சில தினங்களுக்கு முன்னர் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதிகம் படித்தது

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...
- Advertisement -

Related News

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர்! நாசா அறிவிப்பு

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. செய்மதி தொழிநுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்திரனில் இயற்கையான தண்ணீர் இருப்பதை உறுதியாக கூற முடியும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சோபியா...

நிலவில் நீராதாரம் – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என...

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி...

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்- இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது; தொற்றுநோய் தடுப்பு பிரிவு!

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here