Home Breaking News மாத்தளையில் ஒருவருக்கு தொற்று உறுதி - பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

மாத்தளையில் ஒருவருக்கு தொற்று உறுதி – பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாத்தளை-பல்லேபொல,எஹேல்பொல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேபாலி விக்ரமதிலக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.சோதனையின்போது அவரக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சேபாலி விக்கிரமதிலக்க மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர், மாத்தளை பொது வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டமையினால் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தற்போது பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் அவர்களது சொந்த வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 2 குழந்தைகளும் கல்வி கற்கும் மாத்தளை மற்றும் கண்டியில் உள்ள இரண்டு கல்லூரிகளின் கல்வி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடயம் தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஏதேனும் காய்ச்சல் அல்லது பிற நோய்களால் எவரும் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

அதிகம் படித்தது

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...
- Advertisement -

Related News

காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்ட நியமனங்கள்!

ஜனாதிபதியின் சுபீட்சத்தை நோக்கி என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக...

பேலியகொட மீன் சந்தையால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விபரம் வெளியானது!

பேலியகொட மீன் சந்தையில் இதுவரை 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேலியகொட மீன் சந்தையில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இடங்களில் உள்ளனர் என்ற விபரம் வெளியாகி...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி!

கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் நேற்றைய தினம் (23) திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு...

மதுரை- பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு; மூவர் மீது வழக்குப்பதிவு!

மதுரை டி கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளம் கிராமத்தில் ராஜலட்சுமி பயர்வெர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அதில் இருபத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி...

மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோ தயாரிப்பு; பிரான்ஸ் நிறுவனத்திற்கு உதவும் சீனா!

சீன நிறுவனம் ஒன்று, மூளையிலுள்ள இரத்தக்கட்டிகளை அகற்றும் ரோபோவை உருவாக்க பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. Rouen என்ற இடத்தில் அமைந்திருக்கும் பிரான்ஸ் நிறுவனமான Robocath என்ற நிறுவனம், இரத்தக் குழாய்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here