தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ஒரு காலத்தில் டப் கொடுத்து நடித்து வந்தவர் நடிகர் விஜயகாந்த்.
அதுமட்டுமின்றி தற்போது உள்ள முன்னணி நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். சில ஆண்டுகளுக்கு முன் நடிப்பில் இருந்து விலகி தற்போது தே.மு.தி.கா கட்சியின் தலைமை தாங்கி வருகிறார்.
நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று வந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அவர் நோயில் இருந்து குணமடைந்துவிட்டார் என அவரின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மீண்டும் விஜயகாந்தின் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.