Home Breaking News 5 மாகாணங்களில் அனைத்து மேலதிக வகுப்புக்களுக்கும் தடை..!

5 மாகாணங்களில் அனைத்து மேலதிக வகுப்புக்களுக்கும் தடை..!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியை மையப்படுத்தி கொவிட்பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மீள் அறிவித்தல் வரை அனைத்து மேலதிக வகுப்புகளையும் நடத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் கந்தளாய், மஹஓயா, தெஹியத்தகண்டி முதலான கல்வி வலயங்களில், கொவிட்-19 பரவல் அபாயம் உள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர்கள் அறியப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொவிட்-19 நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், மறு அறிவித்தல் வரை அனைத்து மேலதிக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தென்மாகாணத்தில் மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாண ஆளுனர் வில்லி கமகேவும், மத்திய மாகாணத்திலும் மேலதிக வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆளுனர் லலித் யு கமகேவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மேலதிக வகுப்புகளுக்கு நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டது.

மேலும் வடமேல் மாகாணத்திலும் மேலதிக வகுப்புகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மத்திய, கிழக்கு, தென், வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மீள் அறிவிப்பு வரை அனைத்து மேலதிக வகுப்புக்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மாகாண ஆளுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -