Home Breaking News ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு -தவறின் சொத்துக்கள் முடக்கம்!

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு -தவறின் சொத்துக்கள் முடக்கம்!

கொரோனா தொற்றுக்கு இலக்கான மினுவாங்கொடவில் உள்ள பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 1402 ஊழியர்களில் இன்றையதினம் 125 பேர் தமது விபரங்களை அளிக்க வருகை தந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

நேற்றையதினம் 245 ஊழியர்கள் வருகை தந்திருந்த நிலையில் இன்றையதினம் மேற்படி ஊழியர்கள் வருகை தந்துள்ளனர்.

எனினும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் மேலும் சிலர் கொழும்புக்கு வெளியே உள்ளதால் அவர்கள் தமது விபரங்களை அளிக்க வரவில்லை என அவர் தெரிவித்தார்.

தமது விபரங்களை ஊழியர்கள் தெரிவிப்பதற்கான இறுதி நாள் இன்றாகும்.ஆடைத்தொழிற்சாலைக்கு வருகை தர அவர்களால் முடியவில்லை என்றால் அருகிலுள்ள பொலிஸ்நிலையத்தில் முறைப்பாட்டை அளிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர்கள் தமது விபரங்களை அளிக்கத் தவறினால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக முடக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -