Home Breaking News மட்டக்களப்பில் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி வாவியில் குதித்து தற்கொலை முயற்சி – காதலன் உட்பட 3 பேர்...

மட்டக்களப்பில் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி வாவியில் குதித்து தற்கொலை முயற்சி – காதலன் உட்பட 3 பேர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 17 வயது சிறுமியை  துஸ்பிரயோகத்திற்கு உப்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட சிறுமி அங்கிருந்து தப்பித்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலை செய்ய முற்பட்டபோது இராணுவத்தினர் காப்பாற்றினர்.

பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சிறுமியின் காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் உட்பட 3 பேரை இன்று வியாழைக்கிழமை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

வவுணதீவு பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி 22 வயதுடைய ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான கடந்த 4 ம் திகதி இரவு 11 மணியளவில் காதலன் சிறுமியை கையடக்க தொலைபேசி ஊடாக வீட்டில் இருந்து வெளியில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து குறித்த சிறுமி வீட்டின் வெளிப்பகுதில் நின்றிருந்தபோது அங்கு மதுபோதையில் அவளுடைய காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் வந்திருந்ததாகவும் அப்போது சிறுமியை வீதிக்கு வருமாறு அழைத்தபோது
சிறுமி வரமுடியாது என தெரிவித்த நிலையில் காதலனின் நண்பர்கள் இருவர் சிறுமியின் வாயை பொத்தி அவரை வீட்டின் வேலிப்பகுதியில் இருந்து தூக்கி கொண்டு அருகிலுள்ள காட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.இந்த நிலையில் சிறுமியின் காதலன் சிறுமியை முதலில் பாலியல் பலத்தாரம் செய்ததுடன் அவரின் நண்பன் ஒருவன் சிறுமியை பலாத்தகாரம் செய்ய முற்பட்டபோது சிறுமி அவனின் கையை வாயால் கடித்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு தப்பி ஓடியுள்ளார்.

இதன் பின்னர் 05 ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டதுடன்
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமியின் காதலன்
மற்றும் நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 06 ம்திகதி செவ்வாய்க்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து தப்பி மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து ஆற்றில் குதித்து தத்தளித்த போது
அங்கு கடைமையில் இருந்து இராணுவத்தினர்  சிறுமியை காப்பாற்றினர்.

- Advertisement -

அதிகம் படித்தது

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...
- Advertisement -

Related News

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார். இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று...

பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

மன்னார் பாஸார் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது என...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020...

வெள்ளைப்படுதல் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா? என்ன காரணம்..? என்ன செய்யலாம்..?

பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here