Home Breaking News மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி கோர விபத்து!

மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி கோர விபத்து!

வவுனியா, மடுகந்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

இன்று (08) மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மழை காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரது தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர்கள் இருவரும் மரணமடைந்திருந்தனர். இதனையடுத்து குறித்த இருவரது சடலங்களும் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த இருவரும் ஹெல்மட் பட்டியை பூட்டாமல் சென்றமையாலயே தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரகணைளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியான 41 வயதுடைய முகமது மாகீர் என்ற நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரினால் சடலத்தினை அடையாளம் கண்டுள்ளதுடன் மற்றைய நபரின் சடலம் என்னும் அடையாளம் காணப்படவில்லை . விபத்தில் உயிரிழந்தவர்களின் தொலைபேசியின் இலக்கங்களை தொடர்பு கொண்டு சடலத்தினை அடையாளம் காணும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

- Advertisement -

அதிகம் படித்தது

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...
- Advertisement -

Related News

யாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது...

பீ.சி.ஆர் பரிசோதனைக்கு தடையேற்படுத்திய மீனவருக்கு விளக்கமறியல்!

காலியில் மீனவர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தும் போது மருத்துவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு தடைகளை ஏற்படுத்திய மீனவர் ஒருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் ஹர்சன கெக்குனுவல இன்று...

பதுளை எம்.பி அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடை!

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 20 வது திருத்தச்சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது...

டிக்கோயா- வைத்தியர் ஒருவர் சுயதனிமையில்!

கிளங்கன் வைத்தியசாலையின் வைத்தியரும் அவரது குடும்பத்தவர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்தார். ஹட்டன் நகரில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை செய்யும் ஒருவரை முதலில் பரிசோதித்து, அவரை...

தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5 மில்லியன்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here