Home Srilanka கொக்கட்டிச்சோலை- உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை மீறி தடம்புரண்டு விபத்து; மூவர் பலி!!

கொக்கட்டிச்சோலை- உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை மீறி தடம்புரண்டு விபத்து; மூவர் பலி!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி – கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் பயணித்த உழவு இயந்திரம் அதி வேகம் காரணமாக தடம் புரண்டதில் மூன்றுபேர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்த சம்பவம் இன்று(09) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொக்கட்டிச்சோலை கிராமத்தினைச் சேர்ந்த 17வயதினையுடைய ஞானசேகரம் தினுஜன் 15வயதினையுடைய ஜெயச்சந்திரன் சஞ்சிதன் என இனங்காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் அதே கிராமத்தினைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மற்றைய நபர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மண்ணேற்றுவதற்காக சென்ற உழவு இயந்திரம் முச்சக்கரவண்டி ஒன்றினை முந்திச்செல்வதற்கு முயற்சித்தபோது உழவு இயந்திரத்தின் பெட்டி புரண்டு இயந்திரத்துடன் இழுபட்டுச் சென்றுள்ளது.

இவ்வியந்திரத்தின் பெட்டியில் இருந்த ஐவருமே விபத்துக்குள்ளாகியிருக்கின்றனர்.
இதேவேளை வாகனத்தினைச் செலுத்திச்சென்ற சாரதிக்கு எவ்வித விபத்துக்களும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமையுடன் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படுகின்றன.121101026 373487080725130 8387301431542675338 n 121199798 1224695864597010 3164199292109763387 n 121219610 1111960065889190 1146294445569828338 n 121246955 721062745287126 5712763881797541249 n 121257066 409871593334314 7706677544762471840 n

- Advertisement -

அதிகம் படித்தது

தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5 மில்லியன்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி...
- Advertisement -

Related News

தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5 மில்லியன்!

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி...

மேலும் 263 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...

நெடுந்தூர அரச பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்துவதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. கோட்டை, புறக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக...

முச்சக்கரவண்டி விபத்தில் 4 ஆசிரியர்கள் படுகாயம்!

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை- டயகம பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் காயமடைந்து லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை நாகசேனை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த...

கிளிநொச்சி பொலிஸாரால் 3 வாள்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் , பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லையடிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாள்கள் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ – 9 வீதிக்கு அருகாமையில் மின்சார இணைப்புக்களுக்காக அடுக்கப்பட்டிருந்த மின் கம்பங்களுக்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here