Home Srilanka திருகோணமலையில் கொரோனா தொற்றுக்குள்ளான யுவதி!

திருகோணமலையில் கொரோனா தொற்றுக்குள்ளான யுவதி!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 41 பேரை தனிமைப்படுத்தலுக்குட்படுத்தியுள்ளதாகவும், மேலும் ஐவர் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி தெரிவித்தார்.

கந்தளாய் பிரதேசத்தில் கொரோனா தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த தகவலை தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டதையடுத்தே ஊடகங்கள் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலே கந்தளாய் பிரதேச கொரோனா குழு ஊடாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்த எண்ணியதாகவும் தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை மூலமாக கந்தளாய் பிரதேசத்தில் யூனிட் 11, கந்தளாவ பகுதியைச் சேர்ந்த யுவதியொருவருக்கே கொரோனா பொசிட்டீவ் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றும் 41 பாடசாலை மாணவர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும், இம் மாணவர்கள் கந்தளாய் பகுதியிலிருந்து கம்பஹா பகுதிக்கு தனியார் வகுப்புக்கு சென்றவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐந்து பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இச்செயற்பாடுகள் கந்தளாய் பொதுச் சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தினார்.

கந்தளாயில் பொது மக்களை முகக்கவசம் அணியுமாறும் அனைத்து பொது இடங்களிலும் பொது மக்கள் கைகளை சுத்தப்படுத்துவதற்கான மருந்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், கந்தளாய் பொலிஸார், சிவில் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுத்து வருவதாகவும் இதன் போது தெரிவித்தார்.

- Advertisement -

அதிகம் படித்தது

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...
- Advertisement -

Related News

ரிஷாட் கைதாவதைத் தடுக்கும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க...

முட்டாள்களின் பேச்சாலேயே இந்நிலை – கடும் சீற்றத்தில் அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆண்டனி பேஹ்சியின் ஆலோசனைகள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் தெரிவித்துள்ளார். இவரது ஆலோசனைகளை அமெரிக்கர்கள் கேட்டிருந்தால் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று...

பொலிஸாரின் வாகனம் மோதியதில் சிறுமி உட்பட மூவருக்கு ஏற்பட்ட நிலை!

மன்னார் பாஸார் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது என...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்; நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்றபோது கடந்த 12.10.2020 அன்று தாக்கப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020...

வெள்ளைப்படுதல் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிறீர்களா? என்ன காரணம்..? என்ன செய்யலாம்..?

பெண்களின் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here