Home Cinema நடிகர் சூரி கொடுத்த நிலமோசடி புகாரில் வழக்கு; நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்!

நடிகர் சூரி கொடுத்த நிலமோசடி புகாரில் வழக்கு; நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்!

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வுபெற்ற டிஜிபியுமான ரமேஷ், சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது காமெடி நடிகர் சூரி நிலமோசடி புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ACTORSOORI
ACTOR-SOORI

நகைச்சுவை நடிகர் சூரி, கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் இடம் வாங்க திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் இடம் வாங்கவுள்ள தகவலை விஷ்ணு விஷாலிடம் சூரி கூறியுள்ளார். உடனே விஷ்ணு விஷால், தன்னுடைய தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷிடம் நடிகர் சூரி இடம் வாங்கும் விவரத்தைக் கூறியுள்ளார். இதையடுத்து ஓய்வு பெற்ற டிஜிபி, சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜனை நடிகர் சூரிக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மூன்று பேரும் சேர்ந்து நிலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சிறுசேரியில் ஒரு ஏக்கர் 82 சென்ட் உள்ள இடத்தை அன்பு வேல்ராஜன் நடிகர் சூரிக்கு காண்பித்துள்ளார். பின்னர், அந்த இடத்தை ரூ.5.75 லட்சம் ரூபாய்க்கு பேசி முடித்துள்ளனர். பணத்தைக் கொடுத்ததும் சிறுசேரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்துள்ளது. நடிகர் சூரிக்கு விற்கப்பட்ட இடத்துக்கு பாதை இல்லை என்று கூறப்படுகிறது. அதுகுறித்து இடத்தை விற்றவர்களிடம் சூரி முறையிட்டுள்ளார். அதற்கு அவர்கள் இந்த இடத்துக்கு பாதை வரவுள்ளதாகவும், வருங்காலத்தில் நல்ல விலைக்கு அந்த இடம் போகும் என்று கூறியுள்ளனர் சில ஆண்டுகள் கடந்தபிறகும் சூரி வாங்கிய இடத்துக்கு பாதை கிடைக்கவில்லை.

அதனால் நடிகர் சூரி, சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர், ஓய்வு பெற்ற டிஜிபி மற்றும் அவரின் மகனான நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, அந்த இடத்தை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்று கூறிய அந்தத் தரப்பு, அதற்காக சினிமா தயாரிப்பாளர் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தாகத் தெரிகிறது. அதற்கான ஒப்பந்தத்தையும் நடிகர் சூரிக்கு அந்தத் தரப்பு போட்டுக் கொடுத்தது. அதில் 2.75 கோடி ரூபாயை இடத்துக்கும் மீதமுள்ள தொகை 3 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக கொடுப்பதாகவும் கூறியுள்ளது. பணம் கிடைத்தால் போதும் என நடிகர் சூரி தரப்பு ஒப்பந்தத்துக்கு ஓகே செய்துள்ளது. ஆனால் பணத்தைக் கொடுக்காமல் அந்த தரப்பு ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வந்துள்ளது.soori 1602228180

இந்த சூழலில் சம்பந்தப்பட்ட டிஜிபி, கடந்த 2018-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். அப்போது, நடிகர் சூரி தரப்பு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் 50 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளனர். அதன்பிறகு நடிகர் சூரிக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதனால் நடிகர் சூரி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்தார். ஓய்வு பெற்ற டிஜிபி மீதே குற்றம் சாட்டப்பட்டதால் புகார் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து நடிகர் சூரி தரப்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சூரியின் புகாரின் பேரில் செப்டம்பர் 25-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில், சம்பந்தப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அக்டோபர் 28-ம் தேதிக்குள் ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரியை ஏமாற்றியயதாக ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.vikatan 2020 10 97ae558e d09b 4e3a 9a95 6fc3964e102f a37ebb0f ab93 4aef b66a 8fe717cd72b8நீதிமன்ற உத்தரவு

நிலத்தின் மதிப்பு கோடி ரூபாயைத் தாண்டுவதால் அடையாறு காவல் நிலையத்திலிருந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படவுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ், சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் தரப்பும் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.

இதுகுறித்து அடையாறு சரக போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, `நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு (நிலமோசடி) போலீஸார் விசாரணை செய்வார்கள்’ என்றார்.

ஓய்வு பெற்ற டிஜிபி மற்றும் சினிமா தயாரிப்பாளர் மீது நடிகர் சூரி அளித்த புகாரின்பேரில் எப்.ஐஆர் பதிவு செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், தனது தந்தை மீதான புகார் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் திரு.சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். “கவரிமான் பரம்பரை” என்ற படத்துக்காக 2017-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இதுபற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.

உண்மைவரும் வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், உண்மையான தகவல்களுடன் இதுபற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here