Home International நாளை முதல் பொது நிகழ்வில் பங்கேற்கிறார் அமெரிக்க அதிபர்!

நாளை முதல் பொது நிகழ்வில் பங்கேற்கிறார் அமெரிக்க அதிபர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை முதல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என அவரின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்றால் டிரம்ப் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் ராணுவ மருத்துவமனையில் வெள்ளியன்று அனுமதிக்கப்பட்ட அவர் திங்களன்று வெள்ளை மாளிகை திரும்பினார்.

வெள்ளை மாளிகை திரும்பியதிலிருந்து அவரது உடல் நிலையானது சீராக உள்ளதாகவும், நோய் தொற்று அதிகரிப்பதாக பரிசோதனை அறிக்கைகள் காட்டவில்லையென்றும் டிரம்பின் மருத்துவர் சீன் கான்லி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 3-ம் திகதி நடைபெற உள்ள அமெரிக்கா தேர்தல் காரணமாக பிரச்சார பயணத்திற்கு தயாராக டிரம்ப் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக வியாழக்கிழமை டிரம்ப் தான் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை நம்பவில்லை என்றும் பிரச்சார பேரணிகளை மீண்டும் தொடங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். டிரம்ப் இதுபோன்ற பேரணிகளை ஆயிரக்கணக்கான மக்களுடன் நடத்தியுள்ளார், அவர்களில் பலர் முககவசம் அணிந்திருக்கவில்லை.

கொரோனா தொற்றால் டிரம்ப் பாதிக்கப்பட்டிருந்தால், ஜோ பிடனுக்கும், டிரம்பிற்கும் இடையே ஒக்டோபர் 15-ம் திகதி நடைபெற இருந்த விவாதம் காணொளி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டிரம்ப் இந்த விவாதத்தினை புறக்கணித்தார்.

தற்போது 2,10,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொரோனா தொற்று காரணமாக பலி கொடுத்தது, மில்லியன் கணக்கானவர்களை வேலையிலிருந்து வெளியேற்றியது போன்ற விமர்சனங்களை டிரம்ப் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்.

- Advertisement -

அதிகம் படித்தது

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
- Advertisement -

Related News

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

விசேட பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ரிஷாட்

விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ரிஷாட் பதியூதின் அழைத்து வரப்பட்டிருந்தார். விசேட பாதுகாப்பு உடை அணிந்து ரிஷாட் பதியூதின்...

யார் இந்த மாகந்துர மதுஷ்? (கட்டுரை)

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமரசிங்க ஆரச்சிகே மதுஷ்...

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு !

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு ! தம்மை கைது செய்யக் கூடாதென உத்தரவிடக் கோரி ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம்!!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் நாளை (22) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here