வவுனியா நொச்சுமோட்டைப்பகுதியில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்ட விபத்தில் மூன்று வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி மற்றும் ஜீப்புடன் எதிர் திசையில் வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.