உத்தரக்கண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் பிரம்ம கமலம் எனப்படும் அரிய வகைப் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.
பிரம்ம கமலம் எனப்படும் கள்ளிவகையைச் சேர்ந்த செடிகள் மலைப்பாங்கான இடங்களில் பாறைகளுக்கிடையே வளரும் தன்மை கொண்டது.
இமயமலையின் உயரம் குறைந்த பகுதிகளிலும் பிரம்ம கமலச் செடிகள் உள்ளன.
உத்தரக்கண்ட் மாநிலம் கர்வால் என்னும் பகுதியில் வளர்ந்துள்ள பிரம்ம கமலச் செடிகள் பூக்கத் தொடங்கியுள்ளன.
பகல்பொழுதில் குவிந்துள்ள இவ்வகை மலர்கள் இரவில் மலர்வது குறிப்பிடத்தக்கது.