Home Srilanka இராணுவத்தின் மகத்தான சேவையை மதிக்கிறேன்; ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி!

இராணுவத்தின் மகத்தான சேவையை மதிக்கிறேன்; ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கை இராணுவம் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பை பாராட்டுவதாகவும் நாட்டின் இடர் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இராணுவம் வழங்கி வரும் பங்களிப்புக்கு மதிப்பளிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 71வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

71 ஆண்டுகளில் நாட்டின் ஐக்கியம், இறையாண்மை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் இலங்கை இராணுவம் நேரடியான மற்றும் வெற்றிகரமான பங்களிப்பை வழங்கியுள்ளளது.

அத்துடன் நிற்காமல் தாய் நாட்டிற்கு ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்கள், இடர்களில் இருந்து பாதுகாக்கும் காவல் அரணாக செயற்பட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில், இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்பை நான் மதிப்பாக கருதுகிறேன்.

நாட்டின் பாதுகாப்பு , இடர்முகாமைத்துவ உட்பட அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இராணுவம் வழங்கும் பலம் தொடர்பாகவும் எனது நன்றிகைளை தெரிவித்துக்கொள்வதுடன் இன்று கொண்டாடப்படும் 71வது ஆண்டு நிறைவு தினத்திற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.Gotabaya Rajapksha 3

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here