காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.சியார்ட் இலஞ்சக் குற்றசாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பொலிஸ் காவலில் உள்ள தொழிலதிபர் ஒருவரை விடுவிக்க, பொலிஸ் அதிகாரிகளின் மூலம் நடவடிக்கையெடுப்பதாக கூறி 825,000 ரூபா லஞ்சம் வாங்கும் போது அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் இலங்கை பொதுஜன பெரமுனவின் கிழக்கு பிரமுகர் என குறிப்பிடப்படுகிறது.