Home Srilanka கொரோனா விவகாரம்; முடிந்தால் நிரூபியுங்கள்- இலங்கை அரசுக்கு பகிரங்க சவால்!

கொரோனா விவகாரம்; முடிந்தால் நிரூபியுங்கள்- இலங்கை அரசுக்கு பகிரங்க சவால்!

இந்தியாவிலிருந்து பிரன்டிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் அழைத்து வந்தவர்கள் இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவில்லை என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் அரசாங்கம் அறிவித்துள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள் என பிரன்டிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகமும் கொவிட் தொடர்பான செயலணியும் தெரிவித்துள்ளதை அவர் நிராகரித்துள்ளதுடன் கொரோனாவின் தீவிர பரவலுக்கும் இதுவே காரணமென அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்தியாவிலிருந்து பிரன்டிக்ஸ் தொழிற்சாலை நிர்வாகம் அழைத்து வந்தவர்களை எமது கண்காணிப்பிற்கு உட்படுத்தவில்லை.

அவர்களை தனிமைப்படுத்தியிருந்தால் அதனை கண்காணிக்கும் பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்.

பிரான்டிக்ஸ் நிர்வாகம் இவர்களை விசேட விமானங்களிலேயே இலங்கைக்கு அழைத்துவந்தார்கள்.

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என இதற்கு பொறுப்பானவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் எங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதையும், அவர்களை கண்காணித்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் யார் என்பதையும் பகிரங்கப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

அதிகம் படித்தது

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...
- Advertisement -

Related News

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

ஊரடங்கு காலப்பகுதியில் மருந்துகளை விநியோகிக்கும்போது, மருந்தகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ஊரடங்கு அனுமதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில், தடையின்றி...

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு பிரதான தமிழ்க் கட்சிகள் இணங்கவில்லை- மனோ குற்றச்சாட்டு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனுவொன்றை சமர்ப்பிக்க தான் யோசனை முன்வைத்த போதும், அதற்கு சாதகமான பதில்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என நாடாளுமன்ற...

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு...

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில்...

தாய் மற்றும் அவரது 21 நாளான குழந்தைக்கு கொரோனா!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர். குறித்த பெண்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here