கொழும்பு நகரசபையின் 414 ஊழியர்களின் பீ.சி.ஆர் பரிசோதனைகளில், 303 பேரின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
கிடைக்கப் பெறப்பட்ட அறிக்கைகளின்படி, எந்தவொரு ஊழியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரசபை எல்லைக்குள் வசிக்கும் தனிநபர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள இன்று திட்டமிட்டுள்ளதாகக் கொழும்பு மாநகரசபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கம்பஹா மினுவாங்கொட ஆடைத் தொழில்சாலையில் அதிகளவான கொரோனா தொற்றார்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் இனம்காணப்பட்டு வரும்நிலையில் கொழுப்பிலும் பல பாகங்களில் தொற்றார்கள் இனம் காணப்பட்டனர்.
இந்நிலையில் கொழும்பு நகரசபையின் ஊழியர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.