Home Srilanka பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் செயலர் விடுத்த விசேட அறிவிப்பு!

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் செயலர் விடுத்த விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

நாளைய தினம் நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை என்பவற்றுக்கான பரீட்சை மத்திய நிலையங்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலமைப் பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரம் பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பரீட்சை நிலையங்கள் அனைத்தும் சுகாதார தரப்பினரால் முழுமையாக கண்காணிக்கப்பட்டு சுகாதார பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சகல பரீட்சை நிலையங்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பரீட்சார்த்திகளுக்கு இடையில் 2.5 மீற்றர் இடைவெளி பேணும் வகையில் பரீட்சை நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -