பாணந்துறை தள வைத்தியசாலையில் சிறுமியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடுமையாக நோய் வாய்ப்பட்ட நிலையில், வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரிற்கு கொரோனா தொற்று உறுதியானது.
சிறுமியின் தாயாரும் அதே வைத்தியசாலையில் தாதியாக பணிபுரிகிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய வைத்தியர், தாதியர் உள்ளிட்ட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.