Home Srilanka மன்னாரில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா, மஞ்சள் மீட்பு; மூவர் கைது!

மன்னாரில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா, மஞ்சள் மீட்பு; மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மற்றும் மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று வெள்ளிக்கிழமை(9) பொலிஸார் கைப்பற்றி உள்ளதோடு,சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காலை கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைத்திருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

புலனாய்வுத்துறையினரின் இரகசிய தகவழ்களுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நேற்று(9) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த கடற்கரையோர பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ம 125 கிலோ 800 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் ஒரு கோடி 25 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதே வேளை சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகளை நேற்று(9) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையிலான பொலிஸ் குழுவினர் பருத்திப்பண்னை பகுதியில் உள்ள வீட்டின் சமையல் அறையில் பதுக்கி வைத்திருந்த 154 கிலோ 500 கிராம் எடை கொண்ட மஞ்சள் கட்டி மூடைகளை கைப்பற்றியுள்ளதோடு அங்கிருந்து 2250 மில்லி கிராம் கேரள கஞ்சாவினையும் மீட்டுள்ளதோடு, சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளதோடு, குறித்த நபர் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.

இதே வேளை வங்காலை நானாட்டான் பிரதான வீதி, நருவிலிக்குளம் ஆயுர் வேத வைத்தியசாலைக்கு பின் பகுதியில் வைத்து நேற்று (9) வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் 33 கிலோ 650 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்களை வங்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் பியல் தலைமையிலான பொலிஸ் குழுவினரே குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளதோடு, 29 மற்றும் 36 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.DSC 1118 600x400 1 DSC 1136 600x400 1 DSC 1115 696x464 1

- Advertisement -

அதிகம் படித்தது

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
- Advertisement -

Related News

பொதுச் சுகாதார அவசர சட்ட வரைபை சமர்ப்பித்தார் சுமந்திரன்

கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

விசேட பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ரிஷாட்

விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு ரிஷாட் பதியூதின் அழைத்து வரப்பட்டிருந்தார். விசேட பாதுகாப்பு உடை அணிந்து ரிஷாட் பதியூதின்...

யார் இந்த மாகந்துர மதுஷ்? (கட்டுரை)

பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமரசிங்க ஆரச்சிகே மதுஷ்...

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு !

ரியாஜ் பதியுதீனின் மனு நிராகரிப்பு ! தம்மை கைது செய்யக் கூடாதென உத்தரவிடக் கோரி ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நாளை முதல் ஆரம்பம்!!

இம்முறை 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகள் நாளை (22) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here