Home Srilanka யாழ் பல்கலையின் 21 மாணவர்களுக்கு தடை!

யாழ் பல்கலையின் 21 மாணவர்களுக்கு தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 8ம் திகதி ஏற்பட்ட அமைதியின்மை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு, பல்கலைக்கழகத்துக்கும், துணை வேந்தருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தினுள் நுழைய அனுமதிக்கப்படக் கூடாது என்றும் கலைப்பீடச் சபை ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

அத்துடன், மாணவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை வகுப்புகளைப் புறக்கணிப்பதாகவும் கலைப்பீட விரிவுரையாளர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கலைப்பீடச் சபையினால் அடையாளப்படுத்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேருக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -