Home International 400-க்கும் மேற்பட்டோர் படுகொலை; 2 வாரங்கள் நீடித்த பயங்கர போர் முடிவுக்கு வந்தது- ரஷ்யா முக்கிய...

400-க்கும் மேற்பட்டோர் படுகொலை; 2 வாரங்கள் நீடித்த பயங்கர போர் முடிவுக்கு வந்தது- ரஷ்யா முக்கிய அறிவிப்பு!

நாகோர்னோ-கராபாக்கில் ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் சனிக்கிழமை நண்பகல் தொடங்கி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர்.

மாஸ்கோவில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நடத்திய இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே 10 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

செப்டம்பர் 27 முதல் நாகோர்னோ-கராபாக்கில் இடம்பெற்று வரும் மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாகோர்னோ-கராபாக் அதிகாரப்பூர்வமாக அஜர்பைஜானின் ஒரு பகுதியாகும், ஆனால் 1994ல் பிரிவினைவாத போர் முடிவடைந்ததிலிருந்து ஆர்மீனிய கட்டுப்பாட்டில் உள்ளது.

போர் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிற நபர்கள் மற்றும் இறந்த உடல்களை பரிமாறிக் கொள்வதற்கான மனிதாபிமான அடிப்படையில் ஆர்மீனிய வெளியுறவுத்துறை அமைச்சர் Zohrab Mnatsakanyan, அஜர்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சர் Jeyhun Bayramov ஆகியோர் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டனர் என்று லாவ்ரோவ் படித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானும் விரைவாக அமைதியான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட கணிசமான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஒப்புக்கொண்டன என்று லாவ்ரோவ் கூறினார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -