Home Srilanka கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது!

கஞ்சா கடத்திய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது!

யாழ் – கிளிநொச்சி பகுதியிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு கேரள கஞ்சாவை கடத்திய இராணுவ சிப்பாய் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் மின்னேரியா, ஹிங்குரான்கொட மற்றும் அரலங்வில பகுதிகளுக்கு இவ்வாறு கேரள கஞ்சா போதைப்பொருளை கடத்தியுள்ளனர்.

மின்னேரியா குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மின்னேரியா பகுதியில் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 590 கிராம் கேரள கஞ்சா, கஞ்சா விற்பனையின் மூலம் பெற்ற பணம் 61,000 ரூபா ஆகியன கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களின் வங்கிக்கணக்குகளில் 4 இலட்சத்து இரண்டாயிரம் (402,000) ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மிஹிந்தலை இராணுவ முகாமில் கடமையாற்றும் குருணாகல் – மாவத்தகம பகுதியைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரும், ஹிங்குரான்கொட – படுகொட்டுவ பகுதியைச் சேர்ந்த நபரொருவர் மற்றும் மின்னேரியா – ஹேன்யாய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் நீண்ட காலமாக இரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அதிகம் படித்தது

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...
- Advertisement -

Related News

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் – அமெரிக்காவிடம் கோரும் சீனா

இலங்கை மக்களின் நோக்கங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டாம் என இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிற்கு கொழும்பில் உள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது. அமெரிக்க...

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர்! நாசா அறிவிப்பு

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. செய்மதி தொழிநுட்பம் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கு அமைய சந்திரனில் இயற்கையான தண்ணீர் இருப்பதை உறுதியாக கூற முடியும் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சோபியா...

நிலவில் நீராதாரம் – நாசா விஞ்ஞானிகள் தகவல்!

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் அதிக அளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2008ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான் செயற்கைக்கோள் மூலம், நிலவின் மேற்பரப்பில் நீராதாரம் இருக்கலாம் என...

2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு!

தென்அமெரிக்காவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் தற்போதைய காலத்திற்கும் ஏற்றதாக இருப்பது தெரியவந்துள்ளது. குவாதமாலா நாட்டில் உள்ள மயன் கோயில் மற்றும் குடியிருப்புகளை ஆராய்ச்சி...

இரண்டாம் அலையின் வீரியம் அதிகம்- இந்த வைரஸ் விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது; தொற்றுநோய் தடுப்பு பிரிவு!

நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here