சபரிமலை ஐயப்பன் ஆலய நடை மாதாந்த பூஜைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் எந்தப் பூஜையும் நடைபெறாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும் என கூறப்படுகின்றது.
கடும் கட்டுப்பாடுகளுடன் நாள்தோறும் 250 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்றும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது