தெற்கு பல்கலைகழகங்களில் கல்வி கற்று வடக்கிற்கு திரும்பியிருக்கும் மாணவர்கள் அந்தந்த பகுதி சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
களனி, ஸ்ரீஜெயவர்த்தனபுர, ஊவா, மற்றும் ஐசிவிரி கல்வி நிலையங்களிற்கு கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்ற தகவல் வெளியானதையடுத்து, தெற்கில் உயர்கல்வி கற்று, தற்போது வடக்கிற்கு வீடு திரும்பியுள்ள மாணவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அவர்களையும், குடும்பத்தினரையும் சுயதனிமைப்படுத்திக் கொள்ள இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீடு திரும்பிய மாணவர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ தொலைபேசி வழியாக தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.