தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் என்பவர், மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தன்னுடைய பெற்றோரைப் பற்றி பொய்யாக கூறியுள்ளதாக கூறி, அவர் தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த முறை நான்காவது சீசனாக கடந்த வாரம் ஒளிபரப்பானது.
கடந்த மூன்று சீசனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய, நடிகர் கமல்ஹாசன் இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர் 2018-ல் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர்.
இதற்கு முந்தைய வருடம் இறுதி வரை சென்றாலும் ஜெயிக்காத நிலையில். 2018-ல் டைட்டில் வென்றார். இருப்பினும் இவர் மீது மீடியா வெளிச்சம் அதிகம் படவில்லை. தொடர்ந்து மொடலிங் செய்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்திருக்கிறார்.
இதில் கலந்து கொண்டு விளையாடி வரும் இவர், தன் வாழ்க்கையைப் பற்றி கூறும் போது, என் பெற்றவர் என்னை பள்ளியில் சேர்த்து விட்டதோடு சரி. அவர்கள் பள்ளிக்கு பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கிற்கு கூட வந்தது கிடையாது.
நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தலை வலிக்கும். என்ன என்று எழுந்து பார்ப்பேன். அருகில் அப்பா கைகளில் கேஸ் ட்யூப் வைத்து நின்றிருப்பார். அப்போது தான் நான் உணர்வேன் அவர் என்னை அடித்திருக்கிறார்.
அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் போதைக்கு அடிமையானவர். உங்களால் குழந்தையை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் குழந்தை எதற்காக பெற்றுக்கொள்கிறீர்கள் என்று கூறி அழுதார்.
இது அங்கிருந்த போட்டியாளர்கள் மற்றும் வெளியில் பார்க்கும் மக்கள் பலரையும் கண்கலங்க வைத்தது.
இந்நிலையில், தற்போது பாலாஜி முருகதாஸ் தன் பெற்றோரைப் பற்றி பொய்யாக கூறியுள்ளார் என்று அவர் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
யோக்கியன் #BalajiMurugaDoss 😄ஏழை தாயின் மகன் ..குடிகார பெற்றோரின் மகன் .. பாவம் ல 😞
ச்சா ஒரு மனுஷன் குளிக்க கூட பாத்ரூம் இல்லாம ஷாம்பு வாங்க கூட காசு இல்லாம பீர் ஊத்தி குளிக்கிறாரு பாவம்😑#BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/hzqpHWSrAr
— 𝕽𝖔𝖒𝖆𝖓𝕰𝖒𝖕𝖎𝖗𝖊 (@Positivevibessa) October 11, 2020
இதனால் அவருடைய சமூகவலைத்தளத்தை நிர்வகிக்கும் நிர்வாகி, சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்கியுள்ளார்.
இருப்பினும் ஒரு வீடியோ எப்படியோ தப்பி நெட்டிசன்களிடம் சிக்கிவிட்டது. அதில், நீச்சல் குளம் ஒன்றில் பீர் பாட்டிலுடன் இருக்கும் பாலாஜி முருகதாஸ் அதை தலையில் உற்றி குளிக்கிறார்.
இதனால் இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவர் பாதிக்கப்பட்டவர் போன்றோ,புறக்கணிக்கப்பட்ட குழந்தையாகவோ தெரியவில்லை என்ற சந்தேகத்தையும் எழுப்பு வருகின்றனர்.