Home Cinema முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.vijay sethupathi43 1602397312

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் எண்ணூறு விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ள அவர் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதற்கு ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் விடுதலை சிறுத்தைக் கட்சி உள்பட வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனால் அவர் இந்த பயோபிக்கில் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது அவர் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது இந்நிலையில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதில் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிப்பது உறுதியானது. சர்வதேச கிரிக்கெட்டில் முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதால், படத்துக்கு ‘800’ என தலைப்பு வைத்துள்ளனர்.

‘கனிமொழி’ படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குகிறார் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் சாம் சி.எஸ் இசை அமைக்கிறார் விஜய் சேதுபதி, முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது உறுதியானதை அடுத்து அவருக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் விஜய் சேதுபதியை, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமி, முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்பது போல அவர் தெரிவித்துள்ளார். நமக்கெதற்கு மாத்தையா? அவர் ட்விட்டர் பதிவில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள் இதயம்.seenu ramasamy676 1602397270

அவர் நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து உள்ளங்கைக்கு முத்தம் மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?’ என்று கூறியுள்ளார்.

- Advertisement -

அதிகம் படித்தது

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...
- Advertisement -

Related News

சுய தனிமைப்படுத்தலில்- ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்!

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செவ்வாயன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதை கருத்திற் கொண்டே அவர் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளார். செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை...

புருணை இளவரசர் காலமானார் – 7 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

புருணை நாட்டு இளவரசர் அஸிம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். புருணை நாட்டு சுல்தானின் மகனான 38 வயதுடைய இளவரசர் அஸிம் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை...

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காபூலில் குடியிருப்புப் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில்...

ஆமைகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் ஆமைகள் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, பத்து ஆமைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த நபர்களை வாழைச்சேனை மாவட்ட...

மட்டக்களப்பில் சகல உள்ளுராட்சி மன்றங்களுக்குமான அறிவித்தல்!

தற்போது நாட்டில் வியாபகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னாயத்த நடவடிக்கையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல உள்ளுராட்சி மன்றங்களும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயம் சம்பந்தமாக சகல உள்ளுராட்சி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here