வவுனியாவில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், 03 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 10 சாரதிகளுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சோதனை நடவடிக்கை, வுனியா ரயில் நிலைய வீதியில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்டதாக வவுனியா பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்கவின் ஆலோசனைக்கமைய, இரண்டு மணித்தியாலங்கள், இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் முறையாக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரமின்மை, அதிக வாகன ஒலி, முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம், தலைக்கவசத்தினுள் தொலைப்பேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.